மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ராணுவ ரீதியான நடவடிக்கை குறித்து ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக,  டில்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நநடைபெற்றது. 

அப்போது, பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் எதிரிகளுக்கு எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, என, பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 30) டில்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குறிப்பாக ராணுவ ரீதியான நடவடிக்கை குறித்து, இந்த அமைச்சரவை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Discussion on military action in the Union Cabinet Committee meeting led by Modi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->