அசைக்க முடியாது! கண் அசைத்த டெல்லி! அண்ணாமலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் சம்பந்தமான படிப்பை படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. 

சுமார் மூன்று மாதம் லண்டனில் தங்கி இருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அவர் பயிலுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. 

பாஜக மாநில தலைவராக இருந்தவரும் அண்ணாமலை, லண்டன் சென்று விட்டால் தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் பொறுப்பை யார் பார்த்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தது. 

மேலும் அண்ணாமலை விரைவில் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

இந்த நிலையில், பாஜக தரப்பிலிருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. வெளியான் தகவலின் படி, வருகின்ற 28ஆம் தேதி அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளதாகவும், வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை அவர் தொடங்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும் 3 மாத காலம் லண்டனில் இருந்தபடியே தமிழகத்தில் பாஜகவின் கட்சி விவகாரங்களை அவர் கவனித்துக் கொள்வார் என்றும் வெளியான தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல் வரை பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராக அண்ணாமலை தான் நீடிப்பார் என்றும், அவர் தலைவராக இருப்பதை தான் டெல்லி தலைமைகள் விரும்புவதாகவும் பாஜக அரசியல் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் கட்சியின் அமைப்பு ரீதியான ஒரு சில பணிகளை மட்டும் கேசவ விநாயகம் கவனித்துக் கொள்ள இருக்கிறார் என்ற ஒரு தகவலும் பாஜக தரப்பிலிருந்து கசிந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Delhi BJP Heads


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->