மாப்பிள்ளை கையில் தட்டு! பக்தி பகல் வேஷம்! இதை கவனித்தீர்களா? முதலமைச்சர் ஸ்டாலின் கலகல பேச்சு! - Seithipunal
Seithipunal


சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

திருவான்மியூர் பகுதியில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் இன்று 31 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருமணம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மணமகளுக்கு 4 கிராம் தங்க தாலி, கட்டில், மெத்தை, பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் ஒவ்வொரு ஜோடிக்கும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது, முதலமைச்சராக அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தான் அதிகமாக நான் கலந்து கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், திருமண ஜோடிகளில் மாப்பிள்ளை கையில் ஒரு தட்டை கொடுத்துள்ளார்கள். அதாவது, மாப்பிள்ளை தட்டு ஏந்த வேண்டும் என்று கொடுத்துள்ளார்கள்.

இதை நான் குறைத்து பேசவில்லை. பெண்களுக்கு உண்டான உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

பக்தியை பகல் வேஷமாக பயன்படுத்துவோரால் அரசின் பணிகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நமது சாதனைகளை தடுக்கத்தான் பல வழக்குகள் போடப்படுகிறது. அதனை சட்டப்படியே முறியடிக்கிறோம்.

திமுக ஆட்சியில் அறநிலையத்துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள். அனைத்து மதங்களையும் பாகுபாடின்றி நடத்துவதால் தான் திராவிட மாடல் ஆட்சியை மக்கள் கொண்டாடுகிறார்கள்" என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin DMK TNGovt Temple Hindu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->