அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுகிறாரா? முதல்வருக்கு ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுக்கும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


சென்னை, கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து புகார் மனுவை கொடுத்துள்ளார்.

குறிப்பாக, விஷச்சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக ஆளுநரிடம் அண்ணாமலை நேரில் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்தாவது, ''அமைச்சர் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறினால் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம்.

அந்த வகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் தொடர்வதற்கு தகுதியில்லாதவராக இருக்கிறார்.

அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, ஆளுநர் அவர்கள் முதலமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.  

முன்னதாக, வேலைவாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

பொறுப்பு மிக்க ஒரு அமைச்சர் பணத்தை வாங்கியது ஊழல் தான், அதை திருப்பிக் கொடுப்பதற்கோ, சமாதானம் செய்வதற்கோ இங்கு அனுமதி கிடையாது என்றும், செந்தில் பாலாஜி அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கை தொடரலாம் என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Governor RNRavi meet behind Senthil balaji case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->