திடீர்திருப்பம் | கமலாலயத்தில் ஜான் பாண்டியன்! அண்ணாமலையுடன் அவரச ஆலோசனை!
BJP Annamalai meet TMMk Jhon Pandiyan
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், இரட்டை இலை சின்னம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு என்று, இன்று காலை எடப்பாடி பழனிசாமி தரப்பினரை சந்தித்தபின் தெரிவித்திருந்தார்.
மாலை ஜான்பாண்டியன் - ஓ பன்னீர்செல்வத்துடன் சந்திப்புக்கு பிறகு, ஜான்பாண்டியன் அளித்த பேட்டியில், "இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். அது இல்லாத பட்சத்தில், பாஜக தனித்து நின்றால் நாங்கள் நிச்சயமாக ஆதரவை கொடுப்போம். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது" என்றார்.
மேலும், ன்டிஏ கூட்டணியில் தமிழகத்தை பொறுத்தவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தலைமை. எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலையா? பாஜகவா? என்று பார்த்தால், அவர்களுக்குள் ஒரு முடிவு எடுத்து யார் வருகிறார்களோ அவர்களுக்கு எங்களின் ஆதரவு நிச்சயம் உண்டு" என்று ஜான் பாண்டியன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், திடீர்திருப்பமாக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்திற்கு ஜான் பாண்டியன் வந்துள்ளார்.
தற்போது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஜான் பாண்டியன் அவரச ஆலோசனை! செய்து வருவதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது பாஜகவை இடைத்தேர்தலில் போட்டியிட சன பாண்டியன் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம்" என்று, புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai meet TMMk Jhon Pandiyan