#தமிழகம் || சமூகவலைத்தள பதிவால்., பாஜக பிரமுகர் கைது.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்த தவறான தகவலை வெளியிட்ட, பாஜக பிரமுகரை தமிழக போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி : பாஜகவின் இளைஞர் அணியை சேர்ந்த அருள் பிரசாத் என்பவர், முதலமைச்சர் மு க ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து, தவறான கருத்து ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவரின் அந்த பதிவில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது அவர் அணிந்திருந்த ஆடையின் விலை 17 கோடி ரூபாய் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் இந்தக் கருத்தை அவர் பதிவிட்டதாகவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவை சேர்ந்த இளைஞர் அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த எடப்பாடி காவல்துறையினர், தற்போது பாஜக பிரமுகர் அருள் பிரசாத்தை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தவறான கருத்துகளை பரப்புதல், அவப்பெயரை உண்டாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அருள் பிரசாத் மீது எடப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp Arul Prasath arrested For Fb Post


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->