ஜெயலலிதா, கருணாநிதி வரிசையில்.. "Elite Club-ல் கெஜ்ரிவால்".. போட்டு தாக்கிய பாஜக.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிவு பெற்று அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் திமுக தலைமை நல கூட்டணி என மும்முனைப் போட்டியில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற்ற முடிந்துள்ளது. 

தமிழ்நாட்டில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தலைமைலான கூட்டணி வெற்றி பெறும் என்றும், அதிமுக குறிப்பிட தகுந்த வாக்கு சதவீதத்தை பெற்று தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக வரும் எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டெல்லி மதுபான முறையீடு வழக்கிலிருந்து ஜாமினில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

 

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளேன் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி "1997ல் பீகார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத், 1996ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2001ல் கருணாநிதி, 2004ல் சிபுசோரன் வரிசையில் தற்போது சிறையில் இருந்து திரும்பும் முதல்வர்கள் என்ற Elite club-ல் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்துள்ளார்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP criticized aravind kejriwal compare with Jayalalithaa karunanidhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->