பெற்ற வெற்றியால் வெட்கித்தலைகுனிய வேண்டும் திமுக - பாஜக தரப்பிலிருந்து வந்த பரபரப்பு அறிக்கை.!
bjp gk nagaraj say about dmk victory 2022
பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "12 கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு பணத்தையும், பரிசுப்பொருட்களையும் பஞ்சமின்றி பட்டுவாடா செய்து 5
கட்சி மாறிய அமாவாசை அமைச்சர்களை அடியாட்களாக வைத்துக்கொண்டு திமுக பெற்ற வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் வெட்கித்தலைகுனிய வேண்டும்.
பணம் வாங்க மறுத்தவர்களையும் வற்புறுத்தி ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றி,கொங்குமண்டல மக்களை கூனி குறுகச்செய்து படித்தோரையும்,பண்பாளரையும் வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது திமுக.
ஆட்சிக்கு வந்த எட்டே மாதத்தில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று ஒவ்வொரு வாக்காளரும் ஆச்சரியப்படும் வகையில் தேர்தல் கமிஷன் மற்றும் காவல்துறையோடு இணைந்து தேர்தல் என்ற பெயரில் ஜனநாயக படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது திமுக.
சிங்கிளாக சிங்கமாய் நின்று,தன்னம்பிக்கையோடு,தனித்தன்மையோடு தன் வாக்குவங்கிக்கு அடித்தளமிட்டிருக்கிறது பாஜக." என்று ஜி கே நாகராஜ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
bjp gk nagaraj say about dmk victory 2022