மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து போட்டியை கண்டுகளிக்கும் ரிஷி சுனக்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலை இந்திய அணி 03-01 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 05-வது மற்றும் இறுதி  டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் ஆடிய இந்தியா 247 ரன்களைக் குவித்துள்ளது.

அபிஷேக் சர்மா தனி ஆளாக இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கியுள்ளார். 54 பந்தில் 13 சிக்சர், மற்றும் 07 பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 248 என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து ஆடி வருகிறது.

இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அத்துடன், மும்பையில் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்ததாக தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டியை காண ரிஷி சுனக் சென்றுள்ளார்.

அங்கு இரு அணிகளின் கேட்பன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜாஸ் பட்லரை சந்தித்து பேசிய ரிஷி சுனக், ஆட்டத்தை உற்சாகத்துடன் கண்டு களித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rishi Sunak watches the India and England match at the Wankhede Stadium in Mumbai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->