அமெரிக்கா சர்வதேச வர்த்தக விதிகளை மீறுகிறது; சீன வெளியுறவுத்துறை அமைச்சகம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபராக பதவியேற்றத்தில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான சட்டங்களை அமுல்படுத்தி கொண்டு இருக்கிறார்.அந்தவகையில்,  அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுத்துள்ளார். 

அதாவது கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக கனடாவும் 25 சதவிகித வரியை அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ளது. அதேபோல மெக்சிகோவும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில்,  " அமெரிக்காவின் வரி விதிப்பு சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது. அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Chinese Foreign Ministry stated that the US tax violates international trade rules


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->