17 கோடி வேலை வாய்ப்புகள்! மோடி அரசு செய்த சாதனை - பாஜக தரப்பில் வெளியான செய்தி!
BJP Govt last 10 years 17 crows jobs say narayanan thirupathy
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2013 முதல் 2024 வரையிலான 10 வருடங்களில் சுமார் 17 கோடி வேலை வாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 2020 முதல் 2023 வரை விவசாய துறை மற்றும் சேவை துறைகளில் சுமார் 2 கோடியே 60 லட்சம் வேலை வாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகவும், அதே காலகட்டத்தில் உற்பத்தி துறையில் ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் பெருகிக் கொண்டிருந்தன என்றும் சமீபத்திய கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் விவசாயத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதோடு, அத்துறையில் பணியாற்றுபவர்களுக்கான பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படக்கூடிய அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அரசின் தொலை நோக்குப் பார்வை, திறமையான நிர்வாக திறமையால் முதலீடுகளை கவர்ந்து தொழில் துறையை முன்னேற்றி, வேலை வாய்ப்புகளை அதிகரித்து உற்பத்தியை பெருக்கியது என ஒரே சீரான வளர்ச்சியை கடந்த பத்து வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி அவர்க்ளின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி சாதனை படைத்துள்ளது சிறப்பு. இதனால் தனிமனித வருவாய் அதிகரித்துள்ளதோடு, வாங்கும் சக்தி அதிகரித்து பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது இந்தியா. மேலும், விவசாயம், மின்சாரம், உற்பத்தி என அனைத்து துறைகளிலும் கட்டமைப்பை பலப்படுத்தி வருவதன் மூலம் இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க செய்துள்ளது நரேந்திர மோடியின் பாஜக அரசு.
ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல் - இரான் விவகாரம், அமெரிக்க தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களினால் கடந்த வாரம் இந்திய பங்கு சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தங்களின் சில லட்சம் கோடி முதலீடுகளை விலக்கிக்கொண்ட நிலையில், இந்திய முதலீட்டாளர்கள் நம் பொருளாதார வளர்ச்சியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில், அரசின் கொள்கைகளை உறுதியாக பற்றிக்கொண்டு அந்நிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்ற முதலீடுகளுக்கு இணையாக கடந்த சில நாட்களாக இந்திய பங்கு சந்தையில் முதலீடுகளை செய்து வருவது இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதை குறிக்கிறது. இது மேலும் தொடரும், வலுப்பெறும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Govt last 10 years 17 crows jobs say narayanan thirupathy