தமிழகத்தை பதறவைத்த கொடூரம்: அந்த மாய பிம்பம்... ஸ்டாலினின் திமுக அரசு தான் இதற்க்கு காரணம்!  - Seithipunal
Seithipunal


சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டம், பெருமாம்பட்டி அருகேயுள்ள பூசநாயக்கனூர் மேல்காடு குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்டவர்களின் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கமும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தும், அப்படி எதுவுமே இல்லாதாற்போல் ஒரு மாய பிம்பத்தை முக ஸ்டாலினின் திமுக அரசு கட்டமைப்பதன் கொடிய விளைவே இதுபோன்ற நிகழ்வுகள்.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ மூன்றாண்டுகளில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

போதைக்கும்பலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், இக்குற்றச்செயலில் ஈடுபட்டட அனைவரையும் கைது செய்வதுடன், கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும், இனியாவது, போதைப்பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதையும், இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் உணர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK Mk Stalin Govt for salem incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->