தமிழ்நாட்டை நோக்கி புயலா? சம்பவம் செய்யப்போகும் நவம்பர் மாதம் - இப்போதே எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழையை கொடுக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், வரும் நவம்பர் 5ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாகும் என்றும், இது 7ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளை அணுகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயத்தில் இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்னிந்திய பகுதிகளில் இந்த நவம்பர் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கனிந்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அது சுமார் 123 சதவீதம் அளவு அதிகம் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு, காரைக்கால், ஆந்திர மாநில பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை இயல்பு விட அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadru Weather Update November month IMD


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->