மோடியுடன் இணைந்து ட்ரம்ப் செய்யப்போகும் சம்பவம் - ஹெச்.ராஜா போட்ட டிவிட்!
BJP H Raja say about US Trump Victory
2024ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டு மீண்டும் இன்று அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் ஹெச்.ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் நண்பரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று அந்நாட்டின் 47 வது அதிபராக பொறுப்பேற்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய - அமெரிக்க நட்புறவு மேம்படவும், இரு நாடுகளுக்கிடையேயான வெளியுறவுக் கொள்கைகளை பலப்படுத்தவும், உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து அமைதியான, வளமான, நிலைத்தன்மை மிக்க சர்வதேச வளர்ச்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தனது பணிக்காலத்தில் செயல்படுவார் என்பதில் எவ்வித ஐயமில்லை.
அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தனது நாட்டிற்குள் சட்டவிரோத ஊடுருவலை தடை செய்வேன் என அவர் அறிவித்திருப்பது ஒரு நாடு அந்நிய ஊடுருவலால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிந்தவராக இருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
English Summary
BJP H Raja say about US Trump Victory