முஸ்லீம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்கிறது..ஓபனாக பேசிய யோகி ஆதித்திய நாத்!! - Seithipunal
Seithipunal


மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது அரசியமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எஸ்.டி, எஸ்.சி, ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பாதுகாக்க முஸ்லீம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்கிறது என யோகி ஆதித்தியநாத் கூறிவுள்ளார்.

இந்தியாவில் 6ம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்து உள்ளது. கடைசி 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளதால், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் பேசுகையில், மேற்கு வங்கத்தில் 2010 ஆண்டு 118 முஸ்லீம் சாதிகளை ஓபிசி பிரிவில் இணைத்ததன் மூலம் 14 ஆண்டுகளாக ஓபிசி மக்களின் இடஒதுக்கீடு உரிமையை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்துள்ளது.

தொடர்ந்து பேசிய யோகி ஆதித்தியநாத், காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணி கட்சிகளும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக போட்டியிடுகின்றன. மத ரீதியான இடஒதுக்கீடு இந்தியா அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இதனை அம்பேத்கார் எதிர்த்தார். எஸ்.டி, எஸ்.சி, ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பாதுகாக்க முஸ்லீம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்கிறது என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP is facing Muslim reservation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->