தீண்டாமையை ஒழிக்கணுமா? எங்க பக்கம் வந்துடுங்க - திருமாவளவனை அழைக்கும் பாஜக எம்எல்ஏ.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, 

"திமுக தலைவர் மற்றும் அக்கட்சியின் பல்வேறு சீனியர்கள் இந்துமத நம்பிக்கைகளை புண்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது குறித்து புகார் கொடுத்தாலும், திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. போதைப் பொருள் ஒழிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் தீவிரமாகப் பேசி வருகிறார். ஆனால், அரசே மதுபான கடைகள் மூலம் மது விற்பனை செய்து வருகிறது.

திருமாவளவனின் இலக்கு இந்து கோயில்களும் இந்துக்களின் நம்பிக்கைகளும் தான். இதர மத செயல்பாடுகளை அவர் கண்டுகொள்ள மாட்டார். திருமாவளவன் எதைப் பெறுவதற்காக, யாரை திருப்திபடுத்துவதற்காக இந்து மதத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க போன்றவை சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகளை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும்". என்று வானதி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mla call vck thirumavalavan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->