சிறிய மழைக்கே சீரழிந்து போன சென்னை! இது தான் திராவிட மாடலா? பகிரங்கமாக குற்றம் சாட்டும் பாஜக! - Seithipunal
Seithipunal


சிறிய மழைக்கே சென்னை சாலைகள் குண்டும், குழியுமாகி சீரழிந்து போய்விட்டதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சாலைகளை பராமரிக்காததால், புதிய சாலைகளை அமைக்காததால் சிறு தூறலுக்கே, தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

மோசமான சாலைகளால் மக்களுடைய வாகனங்கள் கடும் சேதத்தை சந்திக்கின்ற அதே நேரத்தில், தண்ணீர் தேங்கி நிற்கிற சாலைகளில் வாகனங்கள் செலுத்தப்படுவதால், எரிபொருள் தண்ணீர் போல் செலவாகிறது. 

திராவிட மாடல் திமுக அரசின் மூன்றரை ஆண்டுகளில் அடிப்படை வசதியான சாலைகளை அமைக்க, பராமரிக்க கூட முடியாத அளவிற்கு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிற கொடுமையை, உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது சமீபத்திய மழை. 

சாலைகளை கூட போடா முடியாத அளவிற்கு அரசு நிர்வாகமின்மை நிலவிக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். இது தான் திராவிட மாடல்?" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Thirupathy Condemn to DMK Govt Chennai Rain Floods


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->