டாஸ்மாக் கடையில் கும்பல் கும்பலாக கொலை வெறி தாக்குதல்! இரு கிராமத்தை 50 பேர் மோதல், அடி தடி! பாஜக கண்டனம்!
BJP Narayanan Thirupathy Condemn to TNGovt DMK TASMAC Clash kallakurichi
கள்ளக்குறிச்சியில் உள்ள மது கடையில் இரு கிராமத்தை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோதிக் கொண்டு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள கண்டன செய்தியில், "தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் அவலம் நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது.
இது வரை மது அருந்திய போதையில் தனி நபர்கள் மோதிக் கொள்வது, கொலைகள் அரங்கேறுவது என்ற நிலை மாறி, தற்போது கும்பல் கும்பலாக கொலை வெறி தாக்குதல்கள் துவங்கியிருப்பது சமுதாய சீர்கேட்டினை எடுத்துக் காட்டுகிறது.
இந்நிலை தொடர்வது தமிழகத்திற்கு நல்லதல்ல. ஆனாலும், அரசுக்கும், திமுகவிற்கும் வருவாயை ஈட்டித் தரும் அட்சய பாத்திரமாக விளங்கிக் கொண்டிருக்கும் 'டாஸ்மாக்' மதுவை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காது இந்த திராவிட மாடல் அரசு.
இந்த மது பிரச்சினை மாநிலம் முழுவதும் உள்ள குடும்பங்களை வெகுவாக பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அல்லது அறிந்தும் கல்லா கட்டுவதில் மும்முரமாக உள்ளது.
மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பதோடு திமுகவிற்கும் மதுவே கேடு என்பதை திமுக அறிந்து கொள்வதற்கு முன் இந்த திராவிட மாடல் அரசு வீழும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to TNGovt DMK TASMAC Clash kallakurichi