இன்றைய இளம் பெண்கள் மோசமான ஆடையில் சூர்ப்பணகை போல காட்சியளிக்கின்றனர் - பாஜக பிரமுகர் சர்ச்சைப் பேச்சு!
BJP Person Speech issue
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா பெண்களின் ஆடையைப் பற்றி பேசிய விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஹனுமன் மற்றும் மகாவீர் ஜெயந்தியை ஒட்டி இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், சமகாலத்தில் பெண்கள் அணியும் ஆடையை பார்க்கும் போது சூர்ப்பணகை போல் காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
போதை வஸ்துகளை பயன்படுத்தி விட்டு சாலை ஓரங்களில் திரியும் இளம் பெண்களை பார்க்கும் போது எரிச்சலாக இருப்பதாகவும் சில சமயங்களில் காரை விட்டு இறங்கி கன்னத்தில் அறைந்து விடலாம் என நினைத்ததாக விஜய்வார்கியா கூறியுள்ளார்.
கடவுள் உங்களுக்கு மிக அழகிய உடல் அமைப்பை கொடுத்திருக்கிறார். பிறர் மதிக்கும் முறையில் அழகாக உடை அணிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்திகளை சொல்லிக் கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
விஜயவார்கியாவின் இந்த கருத்துகளுக்கு நாட்டில் பல்வேறு கட்சிகள் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
காங்கிரஸ் பிரமுகர் ஷமா முகமது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இந்த பதிவு குறித்து ஏன் இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.