திருச்சி தொகுதி யாருக்கு? மண்ணின் மைந்தன் vs மண்ணுக்கான மைந்தன்.!! பாஜகவில் வெடித்த மோதல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. 

ஆனால் தமிழ்நாட்டில் பாஜக தலைமை நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முதல் வேட்பாளர்கள் தேர்வு வரை கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் சுக்கு உரிய மரியாதை கொடுக்காததால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு முடிவு வராமல் இழுத்துக் கொண்டு இருக்கிறது. 

பாஜகவுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ள இந்த விவகாரம் அடங்குவதற்குள் திருச்சியில் யார் போட்டியிட வேண்டும் என்ற கருத்து மோதல் பாஜக நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது. 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களம் இறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும்.

வெற்றியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களம் இறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கருத்து தெரிவித்திருந்தார். 

திருச்சி சூர்யாவின் இந்த கருத்துக்கு இன்று பதிலடி கொடுத்துள்ள ராமர் ஸ்ரீனிவாசன் அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் மண்ணுக்கான மைந்தன் என பதிலடி கொடுத்துள்ளார். இதனால் திருச்சி பாஜகவில் உட்கொச்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP rama srinivasan response to BJP Trichy suriya comment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->