#BigBreaking:: சூடு பிடிக்கும் ஆருத்ரா விவகாரம்.. "பாஜக மாநில தலைமையுடன் நெருக்கம்".. பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் திடீர் ராஜினாமா..!! - Seithipunal
Seithipunal


ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஒட்டு மொத்த பாஜக மாநில தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது என பாஜகவில் இருந்து விலகிய பொருளாதார பிரிவு செயலாளர் எம்.ஆர் கிருஷ்ணா பாபு குற்றச்சாட்டு..!!

தமிழ்நாடு பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்து வந்த மதுரையைச் சேர்ந்த எம்.ஆர் கிருஷ்ணாபாபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆருத்ரா நிதி மோசடி விவகாரத்தை சுட்டிக் காட்டியுள்ள அவர் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்கள் மாநில தலைமையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், இதைக் கண்டும் காணாமல் இருக்க எனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் தமிழக பாஜக என்னை பழுது பார்த்துவிட்டது குற்றம் சாட்டியுள்ளார்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி நபர்கள் தலைமைக்கு நெருக்கம்..!!

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எம்.ஆர் கிருஷ்ணாபாபு "ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கட்சியின் தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்கள். தமிழ்நாடு பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளும் அதனை ஆதரிக்கின்றனர். அரசியலில் நாங்கள் எதிர்பார்த்து வந்த பாஜக இது இல்லை. 

இன்று தமிழக பாஜகவில் முழுக்க முழுக்க பணம் மட்டுமே விளையாடுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு பாஜகவில் பதவிகள் வழங்கப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்சிக்காக உழைப்பவர்களை பதவியில் இருந்து நீக்குகின்றனர். கட்சியின் தலைவரே தன் தொண்டன் மீது புகார் அளித்து சிறையில் தள்ளும் அளவிற்கு இன்றைய தமிழக பாஜக இருந்து வருகிறது. 

பாஜகவில் பயணித்தால் என் உயிருக்கே ஆபத்து..!!

இந்த நிலையில் தமிழக பாஜகவில் பயணித்தால் என்றாவது ஒரு நாள் என் உயிருக்கே ஆபத்தும் ஏற்படலாம். தலைமையில் இருக்கும் ஒருவர் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது அனைவருமே அதற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும். பாஜகவில் இருந்து எனக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுகின்றனர். இதன் காரணமாக நான் தமிழக பாஜகவில் இருந்து விலகுகிறேன்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் அண்ணாமலை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக மாநில பொறுப்பில் இருக்கும் அனைவருமே இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பாஜகவின் பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ் ஷா என் மீது போலி புகார் அளித்து சிறையில் அடைத்தார். எந்த ஒரு கட்சியிலும் இதுபோன்ற நடக்காத விஷயம் தமிழக பாஜகவில் நடைபெறுகிறது. தமிழக பாஜக ஒரு அரசியல் கட்சி போன்று இல்லை கட்சியைத் தாண்டி வேறு ஏதோ நடக்கிறது. 

பாஜக மாநில தலைமையை மீறி எதுவும் செய்ய முடியாது..!!

மாநில தலைமையை மீறி தேசிய தலைமைக்கு இது போன்ற பிரச்சனைகளை கொண்டு செல்ல முடியாது. மாவட்ட அளவில் உள்ள பிரச்சனையே மாநில தலைமைக்கு கொண்டு செல்லக்கூடாது என மிரட்டுகிறார்கள். தமிழக பாஜகவில் மாவட்ட அளவிலான பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகிறது. 

இது போன்ற ஆருத்ரா விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கேசவ விநாயகத்திற்கும் தனிப்பட்ட முறையில் புகார் மனுவை பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தேன். அது அவரிடம் கொண்டு போய் சேர்க்கப்பட்டதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. இதன்பிறகு இந்த விவகாரம் குறித்து பேசக்கூடாது எனவும் மீறி பேசினால் உயிரிழக்க நேரிடும் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்" என குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp State secretary resigns pointing out Arudhra fraud


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->