எனக்கு எதிராக சதி செய்கின்றனர் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்.!
work against me ntk leader seeman speech
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தது பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா?
விசாரணை நடைபெற்று வரும்போது குற்றவாளி என்று எப்படி முடிவு செய்வீர்கள்; நீங்கள் நீதிபதியா? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உங்கள் கருத்து என்ன? அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பம் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி இதுவரைக்கும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.

என்னை எதிர்கொள்ள முடியாமல் நடுங்குகின்றனர். என்னைப் பார்த்து நடுங்குவதுடன் எனக்கு எதிராக சதி செய்கின்றனர். நாடெங்கும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்தபோது கனிமொழி வாய் திறந்தாரா? எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை.
வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பதுதான் உங்கள் கொள்கையா? உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? தமிழகத்தில் இருந்து நாள்தோறும் 1 லட்சம் டன் பாறைகள் கொண்டு செல்லப்படுகின்றன.
கேரள மாநிலத்தின் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகின்றன. எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பது உங்கள் கொள்கையா? என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
English Summary
work against me ntk leader seeman speech