அதிர்ச்சி.. வத்தலகுண்டு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அதிரடி நீக்கம்..!
vattalakundu east union admk secretary removed eps announce
வத்தலகுண்டு கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளரை பதவியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-

"கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வத்தலகுண்டு கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மோகன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்த விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றுக் கேட்டுக்கொள்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
vattalakundu east union admk secretary removed eps announce