அப்ப, தமிழக ஆட்சியாளர்களை கைது செய்யவேண்டுமே..! அல்லு அர்ஜூன் கைதை சுட்டிக்காட்டி விமர்சித்த தமிழிசை! - Seithipunal
Seithipunal



பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தெலங்கானா, சத்யா திரையரங்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது கவலை அளிக்கக் கூடியது. 

அதேநேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை. ஓரிடத்தில் தேவைக்கு அதிகமான கூட்டம் சேர தொடங்கிய உடனேயே காவல்துறை கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் துரிதப்படுத்த வேண்டும்.

அசம்பாவிதம் நடக்கும் வரை பார்த்துவிட்டு பின்பு கூட்டம் கூடியதற்காக நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன் உதாரணம். 

தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதையாக, அல்லு அர்ஜூனின் கைது அமைந்திருக்கிறது. சென்னையிலும் வானூர்தி சாகசத்தின்போது கூட்டம் கூட தொடங்கிய உடனேயே தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்க வேண்டும்.

காவல்துறையின் பாதுகாப்பு தோல்வியினால் 5 உயிர்கள் பறிபோயின. தெலங்கானா மாடலின் படி கைது நடவடிக்கை என்றால் இங்கே யாரை கைது செய்திருக்க வேண்டும், தமிழக ஆட்சியாளர்களைதானே தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பைத் தான் அளிக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Tamilisai Condemn to TNGovt and Telangana Govt Allu Arun DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->