முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!
AIADMK General Committee Meet CM Candidate 2026
அதிமுகவின் செயற்குழு & பொதுக்குழு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, 2026ல் எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமைய, கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் சூளுரைப்போம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி வழியிலே செயல்பட்டு, ஆளுமை திறன்மிக்க தலைவரான எடப்பாடியார் அவர்களை 2026ல் மீண்டும் தமிழக முதல்வர் ஆக்குவோம் என சூளுரை ஏற்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டாமல், தமிழகத்திற்கான நிதியை முறையாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2021 தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம-உரிமை, சம வாய்ப்பு வழங்க, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விடியா திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் சேர்ப்பு, நீக்குதலில் பல்வேறு குளறுபடிகளை சரிசெய்யவும், தேர்தல் முறையாக நடத்தப்படுவதையும் கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ரத்து குறித்து கபட நாடகம் நடத்திக்கொண்டு இருக்கும் விடியா திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம், தடுப்பணை திட்டம், நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்ட நிலையில், அவற்றை தொடர்ந்து செயல்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிடல் இன்றி விளம்பரத்திற்காக கார் பந்தயம் நடத்துவது, சிலைகள் அமைப்பது, நினைவுச் சின்னம் அமைப்பது, ஆடம்பர செலவு செய்து, அரசு நிதியை வீணடிக்கும் திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது, உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக, வழக்காடு தமிழை கொண்டுவர வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
மேலூர் அருகே மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டுவர ஒப்பந்தப்புள்ளி கோரியபோது, 10 மாதம் அமைதியாக இருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டிப்பதோடு, சுரங்கம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை சரிவர செய்யாமல், மக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட முறையாக நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டோரை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம், கட்ட உயர்வுகள், வரி உயர்வுகள் என்று மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தலைவர்களான எஸ்.எம் கிருஷ்ணா, சீதாராம் யெச்சூரி, ஈ.வெ.கி.ச இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம்.
English Summary
AIADMK General Committee Meet CM Candidate 2026