இதை எதிர்க்கவே இல்லை! அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் செயற்குழு & பொதுக்குழு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைக்க கூடாது என்றும், ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

ஃபெஞ்சல் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை சரிவர செய்யாமல், மக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட முறையாக நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம். 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டோரை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம், கட்ட உயர்வுகள், வரி உயர்வுகள் என்று மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தலைவர்களான எஸ்.எம் கிருஷ்ணா, சீதாராம் யெச்சூரி, ஈ.வெ.கி.ச இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK General Committee Meet 2024 dec


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->