சென்னையில் பாஜக 'தடா பெரியசாமி' கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாஜக மாநில பட்டியலின தலைவர் தடா பெரியசாமி உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக பட்டியல் இன மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தாததை கண்டித்து, சென்னை அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2022-2023 நிதியாண்டில் பட்டியல் இன மக்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 16,400 கோடி ரூபாய் நிதியில், பத்தாயிரத்து நானூறு கோடி ரூபாயை தமிழக அரசு இன்னும் பட்டியல் இன மக்களுக்காக செலவு செய்யாமல் இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு துணையாக விடுதலை சிறுத்தை கட்சி திருமாளவன் இருப்பதாக குற்றம் சாட்டிய பாஜகவினர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததன் காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில பட்டியலின தலைவர் தடா பெரியசாமி உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே பாஜக தடா பெரியசாமி வீடு, காரை விசிகவினர் உடைத்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Thada Periyasamy Arrested in Chennai koyampedu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->