பட்டியலினத்தை சேர்ந்தவர் முதல்வராக முடியவில்லை என்ற விரத்தி..!! கார்கேவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி..!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே "காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் ஒற்றுமைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர். ஆனால் பாஜகவினர் வீட்டு நாய் கூட நாட்டிற்காக போராடவில்லை. ஆனாலும் தங்களை தேச பக்தர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள்" என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி தந்துள்ள பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் "ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பட்டியல் இனத்தை சேர்ந்த கார்கேவால் கர்நாடக முதல்வராக முடியவில்லை. அந்த விரக்தியில் பாஜக மீது அவதூறு பரப்பியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவார் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர். அவர் சிறையில் இருக்கும் பொழுது தான் சிந்தித்து ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பிறந்தது தான் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு. ஜன சங்கத்தை தொடங்கிய சியாம பிரசாத் முகர்ஜி, தீனதயாளன் உபாத்தியாய உள்ளிட்டோர் நாட்டுக்காக உயிரை கொடுத்துள்ளனர்" என பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bjp Vanathi reply Kharge talks about unable to become the CM


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->