பாஜக வினோஜ் முன்ஜாமீன் கோரி மனு.. பாஜக மீது தமிழக காவல்துறை குற்றச்சாட்டு.!!
bjp vinoj case
பாஜகவினர் மீது தமிழக காவல்துறை குற்றசாட்டியுள்ளது. இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக போலீஸ் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக வினோஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் அரசியலுக்காக மதத்தை ஒரு கருவியாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பயன்படுத்து வருகிறார் என காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார். மேலும், மனுதாரர் தமிழக பாஜக இளைஞரணி தலைவராகவும், சமூக வலைதளத்தில் அதிகம் பின் தொடர்பவர்கள் நிலையிலும் உள்ளார்.
அரசு பொது அமைதியை குலைக்கும் வகையில் மனுதாரர் ட்வீட் செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பு குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பான வினோஜ் ட்வீட் பகைமையை உருவாக்கும் வகையில் உள்ளது.
கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வினோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.