EVM ஐ ஓடிபி வைத்தெல்லாம் திறக்க முடியாது - தேர்தல் ஆணையம் விளக்கம்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்ரா மாநிலத்தில் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு பல வேட்பாளர்களிடம் இருந்தும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் OTP மூலம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் மும்பையில் சிவசேனா ஷிண்டே பிரிவைச் சேர்ந்த எம். பி.யான ரவீந்திர வைகர் தேசிய ஜனநாயக கூட்டணியில், மும்பையின் வடமேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். இதனிடையே ரவீந்திர வைகரின் உறவினர் ஒருவர் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போனுடன் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து தடையை மீறி வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் பயன்படுத்தியதாக கூறி சிவசேனா எம். பி. யின் உறவினர் மீதும், அவரிடம் செல்போனை கொடுத்த தேர்தல் அலுவலர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி கூறுகையில், "OTP வைத்து EVM ஐ திறக்க முடியாது. EVM ஐ எந்த சாதனத்துடனும் இணைக்க முடியாது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே எங்களால் சிசிடிவி காட்சிகளைக் கொடுக்க முடியும். தற்போது போலீஸ் விசாரித்துக் கொண்டிருப்பதால் மேற்கொண்டு விசாரணை வேண்டுமா வேண்டாமா என்பதை பின்னர் தான் முடிவு செய்வோம்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cant Open EVM With an OTP Says Election Comission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->