#திருச்சி || துணை தாசில்தாரை தாக்கி திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு!!
Case filed against DMK councilor for assaulting Deputy Tahsildar in Trichy
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரங்கநாதன் உள்ளிட்ட நான்கு பேர் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கனரா வங்கியில் ரூ.22 கோடி கடனாக வாங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதனை அடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவின்படி காஜாமலை பகுதியில் இவர்களுக்கு சொந்தமான ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர்.
அப்போது அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட நபர்கள் உருட்டு கட்டைகளால் துணை தாசில்தார் மற்றும் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் துணை தாசில்தார் பிரேம்குமார் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர் சங்கத்தினர் அரசு மருத்துவமனையின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக வருவாய்த்துறை அதிகாரிகள் வேலையை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திருச்சிக்கு திமுக மாமன்ற உறுப்பினர் விஜய் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு உள்ளனர்.
English Summary
Case filed against DMK councilor for assaulting Deputy Tahsildar in Trichy