"ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி செல்லாது".. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 4-ம் தேதி உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பாக மேகனா மற்றும் தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

 

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை விட 66,397 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் விஜயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பண பட்டுவாடா, பரப்புரையில் விதிமீறல் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்" என தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed in ChennaiHC challenging Elangovan victory in Erode East election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->