காசு குடுத்து ஓட்டு வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை..டிடிவி தினகரன் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் டிடிவி தினகரன்.

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசுகையில், அதிமுகவும் திமுகவும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை வைத்து ஓட்டுக்கு 300, 500 என கொடுக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றார். திமுக ஆட்சியில் கஞ்சா போதை என பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதால் மக்கள் அருப்தியில் உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2000 இடம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அதிமுகவிற்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை திமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cash with vote not interest ttv dinakaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->