ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீனா? சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனு!
CBI Court ED Jaffer Sadiq bail case
முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் அளிக்க கூடாது என்று, சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி ஜாபர் சாதிக் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார்.
ஜாபர் சாதிக் ஜாமின் கோரிய மனு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது இந்த நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஜாபர் சாதிக் மற்றும் அப்துல் சலீம் இருக்கும் ஜாமின் தரக்கூடாது என்று சென்னை அமலாக்கத்துறை தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டவர் ஜாபர் சாதிக் என்றும் அந்த அந்த பதில் மனுவில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்றம் செய்து 49 கோடி ரூபாய் சொத்து வாங்கியதாகவும், ஜாமின் வழங்கினால், ஆவணங்களையும், சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அந்த பதில் மனுவில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
CBI Court ED Jaffer Sadiq bail case