#தமிழகம் || செல்போன் டவரை காணும்., இருந்த இடம் தெரியாமல் திருட்டு? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


வடிவேலு கிணற்றை காணவில்லை என போலீசில் புகார் அளித்ததுபோல. சிவகாசி அருகே செல்போன் டவரை காணவில்லை என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் சாலையில் தனியார் செல்போன் டவர் ஒன்று செயல்பட்டு வந்தது.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த டவரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க தொழில்நுட்ப அலுவலர் ஜெகதீசன் பராமரிப்பு பணிக்கு சென்றுள்ளார். 

அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த டவரில் ஜெகதீசன் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய சென்றபோது அங்கு இருந்த டவர் காணவில்லை. 

அப்படி ஒன்று இருந்தற்கான அடையாளமே இல்லாமல் அது தொடர்பான பொருள்கள் காணாமல் போய் இருந்தது. இதன் மதிப்பு ரூபாய் 16 லட்சம் என்று தெரிகிறது.

இதனையடுத்து, அந்த டவர் நிறுவனத்திற்கும், நிலம் கையகப்படுத்தும் அலுவலர் கிருஷ்ணசாமி சிவகாசி நீதித்துறை நடுவரிடம் புகார் அளித்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தங்கல் காவல்துறையினர் நேற்று  வழக்குப்பதிவு செய்து காணாமல் போன டவர் எங்கே என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cell phone tower missing case sivakasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->