பஹல்காம் தாக்குதலின் எதிரொலி; நாளை அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு..!
Central government calls for all party meeting tomorrow following the Pahalgam attack
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலாத் பயணிகள் மீது ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 02 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக லடாக்கிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, புதுடில்லியில் உள்ள பிரதமர் அரசு இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,உள்ளிட்ட மூத்த தலைவர்கள், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கவுள்ளார்.
English Summary
Central government calls for all party meeting tomorrow following the Pahalgam attack