ஆட்சியை பிடித்ததும் குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு! - Seithipunal
Seithipunal



18வது மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளில் நடைபெற்றது. மேலும் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இரு தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் ஆந்திராவில் இன்று எண்ணப்பட்டன. முன்னதாக சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. வரும் ஜூன் 9ம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்க உள்ளார்.

தற்போதைய ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்ற கட்சிகள் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், ஆந்திரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதால் தெலுங்கு தேசம் கட்சியினர் மிகுந்த உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவும் ஆட்சியமைக்கப் போவதையொட்டி தனது மகிழ்ச்சியை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu Cutting Cake and Celecbrating his Victory With His Family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->