மத்தியில் ஆதவளிக்க பிஜேபி க்கு செக் வைக்கும் சந்திரபாபு நாயுடு! - Seithipunal
Seithipunal


நேற்று வெளியான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. மத்தியில் கூட்டணி ஆட்சி தான் என்று முடிவாகி விட்ட நிலையில், யார் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

 

ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்றுள்ள நிலையில் பாஜக 240 இடங்களில் தான் வென்றுள்ளது. எனவே பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்லாமல் பாஜகாவில் மத்தியில் ஆட்சியமைக்க முடியாத நிலை தான் தற்போது உள்ளது.

பாஜக தனது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகாரின் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையில் தான் தற்போது பாஜக உள்ளது.

 

அதிலும் குறிப்பாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு பாஜக கூட்டணிக்கு கண்டிப்பாக தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு சொல்லும் அனைத்து நிபந்தனைகளையும் பாஜக ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷா மீண்டும் உள்துறை அமைச்சராக கூடாது என்றும், உள்துறை மற்றும் நிதித்துறை இரண்டும் தெலுங்குதேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு அமித்ஷாவுக்கு செக் வைத்துள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrababu Naidu Demanding BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->