பதவியேற்றதும் திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம்.. !! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal



பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் 175 சட்டமன்ற தொகுதிகளில் மேலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா, மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியில் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் அமோக வெற்றி பெற்றதால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வராக சந்திரபாபு நாயுடு 4 வது முறை பதவியேற்க உள்ளார். 

இந்நிலையில் இன்று காலை தெலுங்கு தேசம் எம் எல் ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆந்திர சட்டப்பேரவை தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 

இதையடுத்து மாநில ஆளுநர் அப்துல் நஷீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் சந்திரபாபு நாயுடு. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கும் இந்த பதவியேற்பு விழா விஜயவாடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள கண்ணாவரம் தொழில் நுட்ப பூங்காவில் நாளை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இதையடுத்து பதவியேற்றவுடன் நாளை மாலை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரது குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். நாளை இரவு அங்கு தங்கி விட்டு மறுநாள் காலை விவிஐபி தரிசனத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu Will Go to Tirupati For Dharshan After Taking Oath


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->