அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் அலங்கார வளைவை அகற்றுவது தொடர்பாக வழக்கை ஒத்தி வைக்க கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆர்பி உதயகுமாருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

இந்த வாழ்க்கை பொருத்தவரை அலங்கார வளைவை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தன்னை எதிர்மனுதாரராக சேர்க்க கோரி உதயகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமார் 100 அடி அகலத்தில் இடம் வாங்கி கொடுத்தால் அலங்கார வளைவை பாதுகாக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், ஒவ்வொரு நாளும் அலங்கார வளைவை கடந்து வருவோருக்கு தான் அதன் கஷ்டம் தெரியும் என்றும், பொது நலனுடன் முன்னாள் அமைச்சர் யோசிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

மேலும் அலங்கார வளைவுகளை அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மதுரை மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Division condemn to RP Udhayakumar ADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->