அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள எந்த ஒரு மரத்தையும் வெட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
Chennai HC Division Order For Govt Place Tree
அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள எந்த ஒரு மரத்தையும் வெட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த சமூக ஆரவாளர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவரின் அந்த மனுவில், "கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கால்வாய் ஓரம் அரசுக்கு சொந்தமான இடத்தில் வேம்பு உள்ளிட்ட மரங்கள் இருக்கின்றன.
இந்த மரங்களை சில நபர்கள் தன்னிச்சையாக வெட்டி உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை என்றுஇன்று விசாரணை செய்த நீதிபதிகள் முன், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவிக்கையில், "வெறும் சீமை கருவேல மரங்களை மட்டும் தான் அவர்கள் வெட்டி உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு யாருக்கும், எந்த அதிகாரமும் இல்லை. அப்படி மரத்தை வெட்ட வேண்டும் என்றால் துறை ரீதியான அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும். மனுதாரரின் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
English Summary
Chennai HC Division Order For Govt Place Tree