சென்னை: ஆசன வாயில் பைப்பை விட்டு... போலீசாரின் அராஜகம்? என்ன பதில் சொல்ல போகிறார் ஸ்டாலின்?
Chennai RK Nagar Police Attacked case
சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் வைத்து கைதியை கொடூரமாக போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்கள் மோகன், யுவராஜ் என்பவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இது சம்பந்தமாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர் மோகனை கொடூரமாக தாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுனர் மோகனின் தாய் காவல் நிலையத்தின் வாசலிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள அளித்த பேட்டியில், தனது மகனை காவல் நிலையத்தில் பார்த்தபோது, ஆசனவாயில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்ததாக தெரிவித்தார்.
குடிக்க தண்ணீர் கேட்டால் மூத்திரத்தை பிடித்து கொடுத்தார்கள், என்னால் முடியவில்லை, எனக்கு தண்ணீர் வாங்கி கொடுத்து, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனக்கு ஒரு ஊசியாவது போடுமா என்று என் மகன் கதறினார்.
பின்னர் போலீசார் தீவிரவாதியை அழைத்து செல்வது போல எனது மகனை 20 பேர் சேர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின்பு எனது மகன் கைது செய்து அழைத்து சென்று விட்டனர் என்று மோகனின் தாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து= அதிமுக நிர்வாகி ராஜ் சத்தியம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வைத்து கைதியை கொடூரமாக தாக்கிய காவலர்கள்.
ஆசன வாயில் பைப்பை விட்டு ரத்தம் வெளியேறும் வரை தாக்கியதுடன் தண்ணீர் கேட்ட போது சிறுநீரை குடிக்க வைத்த அவலம்.
திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 3 ஆண்டுகளில், காவல்துறை விசாரணையின்போது எளிய மக்கள் உயிரிழப்பதும், தொடர்ச்சியாக கொடுமையாக தாக்கப்படுவதும் தான் சமூக நீதியா?
காவல்துறையை கையில் வைத்துள்ள விடியா முதல்வர் இந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Chennai RK Nagar Police Attacked case