எவ்வளவு ஆட முடியுமோ ஆடுங்க, எவ்வளவு மிரட்ட முடியுமோ மிரட்டுங்கள்! பல்லாவரத்தில் சர்ச்சை! கொந்தளிக்கும் தவெகவினர்!
Chennai TVK TN Police
சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு மக்களுக்கும் தவெகவினர் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து இருந்தனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் நிவாரண பொருட்கள் வழங்க பிற கட்சிகளை அனுமதித்த நிலையில், தங்களை மட்டும் தடுத்து நிறுத்தியதாக தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து லயோலா மணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கொடி ஏற்ற அனுமதி இல்லை. நலத் திட்ட உதவிகள் செய்ய அனுமதி இல்லை. நிகழ்வு நடத்த அனுமதி இல்லை. பொது நிகழ்வை அழுத்தம் கொடுத்து இடம் மாற்றுவது. பல நிகழ்வை செய்ய விடாமல் முடக்குவது. ஆட்சியும், அதிகாரமும் நிலையானது இல்லை.
அதிகார மமதையில் செயல்படுவதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு ஆட முடியுமோ ஆடுங்கள். எவ்வளவு மிரட்ட முடியுமோ மிரட்டுங்கள். எல்லாவற்றையும் எதிர்கொள்ள எல்லோரும் தயார்.
உங்களின் இந்த அழுத்தமே ஒரு செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறது. அடுத்து நாங்கள்தான் ஆளும் கட்சி என்று. வருங்கால முதல்வர் தலைவர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.