செஸ் ஒலிம்பியாட்டுக்கு ஆன செலவு என்ன தெரியுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்கி . செப்டம்பர் 18-ந்தேதி வரை  ஒரு வாரம் நடக்க உள்ளது . 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில்  செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில்  தொடங்க உள்ளதால் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு செய்தார். 

அதன்பின்னர் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தாவது, "தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்  எதிர்பார்ப்பாக உள்ள உலக மகளிர் டென்னிஸ் போட்டியை அரசு WTOஉடன் இணைந்து நடத்த உள்ளது. உலக தரத்தில் மைதானத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன் மூலம் சர்வதேச போட்டிக்கு மீண்டும் சென்னை தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த , தமிழ்நாட்டு டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் செப்டம்பர் 8 முதல் இந்த மைதானத்தில் பயிற்சியை  தொடங்க உள்ளனர். 

கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. நிச்சயம் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணியில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 500 கோடி செலவு செய்திருப்பார்கள். 

ஆனால், திமுக அரசு மிகவும் குறைத்து 114 கோடியில் போட்டியை நடத்தி காட்டி உள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் செலவு கணக்குகளை பொதுத்தளத்தில் வைக்கிறேன். யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்துக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chess Olympiad expanse


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->