நெல்லையைச் சேர்ந்தவருக்கு துபாயில் அடித்த அதிஷ்டம்... ரூ.2¼ கோடி பரிசு!
Lucky for a man from Tirunelveli in Dubai Rs 2.5 crore prize
நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் ரூ.2¼ கோடி பரிசு கிடைத்துள்ளது ,மேலும் லாட்டரி குலுக்கலில் விழுந்த தொகையினை தனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளார்.
கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்கும் என்று பலர் வாய்மொழியாக பேசுவதை நாம் அறிந்திருப்போம்.அந்த வாய்மொழியைப்போல நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்கு தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுத்திருக்கிறது.தமிழகத்தில் நெல்லையை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம்.41 வயதான இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.அவர் அதிர்ஷ்ட லாட்டரியில் வாங்கிய சீட்டுக்கு 10 லட்சம் திர்ஹாம் இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து பீர் முகம்மது ஆதம் கூறியதாவது:-நான் கடந்த 2007-ம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன் என்றும் என்னுடைய மனைவி மற்றும் 4 வயது மகள் நெல்லையில் வசித்து வருகின்றனர் என்றும் துபாயில் கடந்த 3 ஆண்டுகளாக நானும் என்னுடைய இந்திய, பாகிஸ்தானிய நண்பர்கள் என மொத்தம் 20 பேர் சேர்ந்து மாதந்தோறும் அதிர்ஷ்ட லாட்டரியில் பங்கு பெறுவோம் என கூறினார்.
மேலும் இம்முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம் என்றும் இந்தமுறை முதல் முறையாக எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என கூறினார். அதிர்ஷ்ட லாட்டரியில் வாங்கிய சீட்டுக்கு 10 லட்சம் திர்ஹாம் இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி பரிசு கிடைத்துள்ளது என்றும் 10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என கூறிய பீர் முகம்மது ஆதம்.எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன் என்று .இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Lucky for a man from Tirunelveli in Dubai Rs 2.5 crore prize