உடல் உறுப்பு தானம் செய்ய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்! - Seithipunal
Seithipunal


சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உறுப்பு தான நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, உடல் உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு மற்றும் ''மறுபிறவி''  உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்த்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 1998 உறுப்புக் கொடையாளர்கள் உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் தற்போது வரை 585 பேர் உடலுறுப்பு தானம் செய்திருப்பதாக கூறிய அவர், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி மருந்துகளும், நாய்க்கடி மருந்துகளும் கையிருப்பில் உள்ளதாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் கையிருப்பு இருந்ததா? என்பதை எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று சாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister M. K Stalin registration for organ donation Minister M.Subramanian Information


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->