சிவகாசி பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!...தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகள் கேட்பு! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகாசியில் உள்ள  பட்டாசு ஆலையை பார்வையிட்ட நிலையில்,  பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை  கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக விருதுநகர் செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமான நிலையம் அடைந்தார். தொடர்ந்து கார் மூலம்  விருதுநகர் வந்த முதலமைச்சருக்கு,  சத்திரரெட்டியபட்டி விலக்கில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும்  60 ஆயிரம் கட்சி தொண்டர்கள் திரண்டு, தி.மு.க. கொடியுடன் முதலமைச்சரை வரவேற்றனர்.

பின்னர், சிவகாசி அருகே உள்ள கன்னிச்சேரிபுதூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை  கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விருதுநகரில் வாகன பேரணி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள நிலையில், திறந்த வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்று  பொது மக்களை சந்திக்க உள்ளார். பின்னர், மாலை 6 மணிக்கு  விருதுநகர் மருத்துவ கல்லூரி அருகே உள்ள தி.மு.க. நிர்வாகிகளுடனான  ஆலோசனை கூட்டத்தில் பேச உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief minister mk stalin at sivakasi crackers factory discuss with workers and ask for grievances


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->