சிறுவர்கள் செய்த செயல்..பாமக ம.க ஸ்டாலின் நெகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவில் வீடு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஒரு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராக ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ம.க ஸ்டாலின். அந்த வகையில், பூதக்குடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களிடையே திட்டங்களை கூறிவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, நான்கு சிறுவர்கள் பேப்பரில் மாம்பழச் சின்னத்தை வரைந்து ம.க ஸ்டாலினிடம் கொடுத்தனர். அதனை கண்டு பூரிப்படைந்தார் மக. ஸ்டாலின். 

இந்த நிகழ்வை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இது குறித்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

children drawing view pmk mk stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->