நாளை அமைச்சராகும் உதயநிதி .. ட்விட்டரில் ட்ரெண்டாகும் சின்னதத்தி_எனும்_நான் ஹேஷ்டேக்.!
Chinna thathi enum Nan hashtag trend in twitter
கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர், தற்போதைய தமிழ்கா முதல்வர் ஸ்டாலினின் மகன் 'உதயநிதி' வெற்றிபெற்று எம்எல்ஏ.,வானார்.
அப்போதே அவர் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து நாளை (டிசம்பர் 14 ஆம் தேதி) அமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான அதிர்க்கரபூர்வ அறிவிப்பில், நாளை (டிசம்பர் 14 ஆம்) தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பதற்கான கடிதம் நேற்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து நாளை (டிசம்பர் 14) காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் 400 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், கடும் விமர்சனமங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் தற்போதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் ஒரு பேட்டியில் நான் அரசியலுக்காக சினிமாவில் நடிக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை அமைச்சராக பொறுப்பேற்கும் ட உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விமர்சனம் செய்தும் ட்விட்டரில் #சின்னதத்தி_எனும்_நான் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
English Summary
Chinna thathi enum Nan hashtag trend in twitter