தவெக - அதிமுக கூட்டணி உறுதி?...இதோ எடப்பாடி பேசிய ரகசியம்! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு  தொடங்கியது. ஒன்று அரை மணி நேரம் நடைபெற்ற  இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் பங்கேற்கனர்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1.5 ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், இது குறித்தான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியது குறித்தும், அதனால் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு வருமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக பேசியுள்ளார். அந்த வகையில், திமுக, பாஜக-வை தவிர மற்ற கட்சியை விமர்சிக்க வேண்டாம்  என்று அதிமுக கட்சி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதன் படி தவெக-வை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று மறைமுகமாக பேசியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டில் இறுதிக்குள் அதிமுக பொதுக்குழு அமைத்து அதில் முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk aiadmk alliance confirmed here is the secret that edappadi talked about


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->